Sunday, August 23, 2026 3:06 pm
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என வலம் வருபவர் தனுஷ். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சில ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இதுவரை நான்கு தேசிய விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்
சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்து தற்போது நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கும் நிலையில் தனுசுக்கும் அரசியலில் மீது ஆசை வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு நடந்த அவர் பிறந்த நாள் விழாவில் பேசிய தனுஷ் அவரது ரசிகர்களிடம் ‘நாம் இப்படியே இருக்க கூடாது.. மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்.. நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்’ என அவர் பேசியிருந்தார்.
தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என பல ஊடகங்களும் செய்து வெளியிட்டன. ஆனால் தற்போது வரை தனுஷ் தரப்பிலிருந்து இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. எனவே அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகியிருக்கிறது.
இந்நிலையில் கட்சிக்காக ஐந்து பெயர்களை தேர்வு செய்து கொடுத்திருக்கும் தனுஷ் கட்சியை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வழக்கறிஞர்களை டெல்லிக்கு அனுப்பியிருப்பதாக சொல்லப்படுகிறது.

