Sunday, August 23, 2026 2:56 pm
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய, சீனா பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிதித்தார் ஜனாதிபதி ட்ரம்ப். இதை அமெரிக்க நீதிமன்றம் கண்டித்தது. அதன்பின் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அந்த வரி குறைக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இறக்குமதி வரியை 100 சதவீதமாக உயர்த்தும் மசோதாவை அமெரிக்க செனட் சட்டசபையில் அவர் தாக்கல் செய்தார்.
அமெரிக்கா அதிக அளவில் வரி விதித்த நாடுகளில் கனடாவும் ஒன்று. இந்நிலையில், அமெரிக்கா விதிக்கும் வரிக்கு இணையாக கனடாவும் வரிவிதிக்கும் என கனட பிரதமர் மார்க் கார்னி அதிரடியாக அறிவித்திருக்கிறார். இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையையும் ரத்து செய்வதாக கார்னி அறிவித்திருக்கிறார்.
ஏனெனில் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே 20 மில்லியன் டொலர் மதிப்பிலான கனடா பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் வர்த்தக போர் முற்றியிருக்கிறது.

