Monday, June 29, 2026 3:25 pm
வெனிசுலாவில் சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில் 4 நாட்களுக்குப் பிறகு லா குய்ரா நகரில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தந்தையும், மகனும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் அமெரிக்க மீட்புப் படையினர் இணைந்து பிரத்தியேக கேமராக்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி இவர்களைக் கண்டறிந்துள்ளனர். சுமார் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அவர்கள் இருவரையும் பத்திரமாக வெளியே எடுத்துள்ளனர்.
நீண்ட நேரம் இருவரும் இடிபாடுகளுக்குள் இருந்ததால் கடும் நீர்ச்சத்து குறைபாட்டுடன் சோர்வாகக் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கு முன்பு இதேபோல இடிபாடுகளில் இருந்து ஒரு தாயும், அவரது 9 மாதக் குழந்தையும் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

