Friday, August 14, 2026 3:47 pm
மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரான நியாமியில், கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி மூன்று ஆயுதமேந்திய நபர்களால் கடத்தப்பட்ட மத போதகர் ரைடவுட் ஒன்பது மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக அவரது மத அமைப்பு தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்டதாகவும், அவர் அநேகமாக நகரத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அப்போதைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தக் கடத்தலுக்கு எந்தவொரு ஆயுதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
அல்கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுடன் தொடர்புடைய ஜிஹாதிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு நைஜர் நீண்ட காலமாக இலக்காகி வருகிறது.
ரைடவுட் கடத்தப்பட்ட மறுநாள், நியாமியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது. அதில், “தலைநகரம் உட்பட நைஜர் முழுவதும் அமெரிக்கக் குடிமக்கள் கடத்தப்படும் அதிக அபாயத்தில் உள்ளனர்” என எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி முகமது பஸூமைப் பதவியிலிருந்து நீக்கிய பின்னர் , 2023-ல் ஆட்சிக்கு வந்த ஒரு இராணுவ ஆட்சிக்குழுவால் நைஜர் ஆளப்படுகிறது . இந்தப் புதிய அதிகாரிகள், நைஜரில் படையினரைக் கொண்டிருந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய கூட்டாளிகளை வெளியேற்றி, ரஷ்யாவுடன் ஒரு புதிய பாதுகாப்பு மற்றும் இராஜதந்திரக் கூட்டணியை உருவாக்கினர்.

