Monday, May 11, 2026 2:32 pm
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று திங்கட்கிழமை (11) ஆரம்பமாவதனை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் , மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலி-தெற்கு பிரதேச சபை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவு இடம்பெற்றது.
இதனை சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் பொதுச்சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின்போது கஞ்சிகூட கிடைக்காது மக்கள் துன்பப்பட்டதனை நினைவுகூறும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
இதில் வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் , உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


