Wednesday, June 24, 2026 2:22 pm
செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 32ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இது வரையிலான அகழ்வு பணிகளின் போது 412 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 409 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் யூலை 15ஆம் திகதி முதல் அனழ்வுப்பணிகள் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

