Wednesday, June 24, 2026 2:09 pm
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலையற்ற பட்டதாரிகளால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது போராட்டம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

