Thursday, June 25, 2026 10:01 pm
வெனிசுலாவில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, குறைந்தது 164 பேர் உயிரிழந்ததாகவும், 971 பேர் காயமடைந்ததாகவும் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.மீட்புப் பணிகள் தொடர்வதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
7.2, 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெனிசுலாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் அடங்கும்.
தலைநகர் கராகஸுக்கு வடக்கே அமைந்துள்ள, கடுமையாகப் பாதிக்கப்பட்ட லா குவைரா பகுதிக்கு, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து மீட்புக் குழுக்களை அதிகாரிகள் மாற்றி வருவதாக ரோட்ரிக்ஸ் கூறினார்.
“அங்கு நூற்றுக்கும் அதிகமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. உயிர்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் தற்போது தீவிர மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

