Tuesday, May 5, 2026 1:14 pm
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து தமிழக முதலமைச்சர் பதவியை திராவிட முன்னற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார்.
பதவி விலகல் கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கடிதத்தை பெற்றுக்கொள்ளும் ஆளுநர் தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆட்சி அமைக்கும்படி அழைப்பு விடுப்பார் என கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
தி.மு.க. 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அஸ்தஸ்தை பெற்றுள்ளது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில் எம்.எல்.ஏ. வாய்ப்பையும் இழந்தார்.

