Tuesday, May 5, 2026 12:54 pm
நாவலப்பிட்டி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை பாடசாலை வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பாடசாலை மாணவர்கள் மற்றும் வேன் சாரதி ஆகியோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடபுல, நாவலப்பிட்டி பகுதியிலிருந்து ஹரங்கல நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற குறித்த வேன் சுமார் 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த மாணவர்கள் மற்றும் சாரதி சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

