Wednesday, October 28, 2026 4:53 pm
ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முன்னாள் இந்திய பரா தடகள வீரர் நீரஜ் யாதவ் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவை இந்திய பரா-தட கள தலைமை பயிற்சியாளர் எஸ். சத்யநாராயணா உறுதிப்படுத்தியுள்ளார். டெல்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனையில் நீரஜ் யாதவின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. அங்கு சக பரா தடகள வீரர்களான சுமித் அந்தில் ,விபின் கசானா ஆகியோர் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பயிற்சியாளர் சத்யநாராயணா, நீரஜ் யாதவின் மறைவு மிகுந்த வேதனையை அளிப்பதாகத் தெரிவித்தார். விளையாட்டு வீரர்கள் வாழ்வில் வரும் ஏற்ற இறக்கங்களை மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும், அவர் இத்தகைய முடிவை எடுத்தது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கூறினார்.F55 பிரிவில் போட்டியிட்டு வந்த நீரஜ் யாதவ், ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். ஆசிய பரா ஈட்டி எறிதலில் 3 பதக்கங்களையும் அள்ளிய இந்தியா. பிரணவ் சூர்மாவும் தங்கம் வென்றார் இதன் காரணமாக, நடப்பு மாதத் தொடக்கத்தில் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது. இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து இதுவரை முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. இந்திய பரா-தடகளத் துறையில் முக்கிய வீரராகத் திகழ்ந்த நீரஜ் யாதவ், ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகளில் தனது விளையாட்டு வாழ்க்கையில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2018-ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற போட்டியில் ஈட்டி எறிதல் , தட்டு எறிதல் ஆகிய இரண்டு பிரிவுகளிலுமே தங்கம் வென்றார்.

