Monday, June 29, 2026 3:42 pm
பேரனுடன் இணைந்து 18000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து 80 வயது முதியவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தனது பேரனுடன் இணைந்து 18000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் அங்கித் என்ற இளைஞனும் அவரது தாத்தாவுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இவர்கள் ஏற்கனவே 15000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்திருந்தனர்.
இருவரும் பெரசூட் உதவியுடன் வானில் பறந்து வெற்றிகரமாகத் தரையிறங்கினர். தரையை அடைந்தவுடன் கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி குறித்த முதியவர் “ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! ஜெய் ஹரியானா!” என கூறியுள்ளார்.

