Thursday, August 13, 2026 10:37 am
கீரிமலை புனித பூமியை அண்டிய பிரதேசங்களில் குப்பை கொண்டப்படுவதை நிறுத்தக்கோரிய நேற்றைய தினம் துண்டுப்பிரசுரம் ஒன்று பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
கீரிமலையை அண்டிய நல்லிணக்கபுரம் மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதிகளில் கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக பிரதேச சபையின் குப்பைகள் மற்றும் ஏனைய கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதுடன் நன்னீர் மாசடைந்தல், வளி மாசடைதல் என்பன ஏற்படுவதனைச் சுட்டிக்காட்டி குறித்த துண்டுப் பிரசுரம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நடவடிக்கையில் பாராளுபன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

