Friday, August 14, 2026 4:17 pm
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்படி, இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 91,346 பேர் டெங்கால் பாதிக்கப்பட்ட்டதாகவும். 8 பேர் பரணமானதாகவும் பதிவாகியுள்ளது. ஓகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் மொத்தம் 6,004 பேர் பாதிக்கப்பட்டனர். ஜூலை மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 29,968 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளன.
மேற்கு மாகாணத்தில் அதிகபட்சமாக 48,383பேரும், தெற்கு மாகாணத்தில் 13,479 பேரும், மத்திய மாகாணத்தில் 8,160 பேரும் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

