Friday, August 7, 2026 7:54 pm
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ரொக்கெற்ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அதிவேகத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பல மாதங்களாக விண்வெளியில் சுற்றித் திரிந்த 4,000 கிலோ நிறையுள்ள ரொக்கெற் பாகம், நிலவின் பின்புறத்தில் மோதியதில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், விபத்தின்போது மாபெரும் தூசுப் படலம் கிளம்பியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஸ்ஸின் அளவுக்கு அல்லது ஐந்து மாடி கட்டிடத்திற்கு இணையான நிறையுடைய ட இந்தரொக்கெற், மிகக் கடுமையான வேகத்தில் நிலவில் மோதியுள்ளது. மனிதர்கள் வாழத் தகுதியான சூழல் குறித்து நிலவில் தொடர் ஆய்வுகள் நடந்துவரும் வேளையில், இத்தகைய விபரீத நிகழ்வு விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

