Tuesday, June 30, 2026 10:32 am
இன்று (30) நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை திருத்தியமைத்துள்ளது.
திருத்தியமைக்கப்பட்ட விலைகளின் அடிப்படையில் 92 ரக ஒக்டேன் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
434 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 414 ரூபாவாக விற்பனைசெய்யப்படுகின்றது.
407 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு 382 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும் லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளுக்கு அமைவாக தமது எரிபொருள் விலையை திருத்துவதாக அறிவித்துள்ளது.

