Sunday, May 10, 2026 1:21 pm
தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பதவி ஏற்றர். தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் , ஐயூஎம்எல் விஜய்க்கு ஆதரவு அளித்தன.
. நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றுகொண்டிருக்கும் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
திரையுலகைச் சேர்ந்த நடிகை திரிஷா, அர்ச்சனா கல்பாத்தி, விஜய் நண்பர் சஞ்சீவ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர் .நடிகை த்ரிஷாவுக்கு முன் வரிசையில் இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

