Sunday, May 10, 2026 1:30 pm
தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக தவெகவின் எம்எல்ஏவான சோழவந்தன் கருப்பையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னிலையில் தான் நாளை முதல்வர் விஜய், அமைச்சர்கள் உள்பட சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் எம்எல்ஏவாக பதவியேற்கின்றனர்.
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க மூன்று நாட்கள் அவகாஅசம் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் மட்டுமே விஜய்யால் முதல்வராக தொடர முடியும். தோல்வியடைந்தால் முதல்வர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பை குரல் வழி அல்லது கையை உயர்த்துதல் அல்லது பொத்தான் அழுத்துதல் முறையில் எடுப்பதை கருப்பையா தான் முடிவு செய்வார். இதில் குரல் வழி அல்லது கையை உயர்த்துதல் என்றால் தவெக ,அதன் கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை தவிர அதிமுக, திமுகவில் உள்ளவர்கள் மாற்றி வாக்களித்தால் தெரிந்துவிடும். அதேவேளையில் பொத்தான் அழுத்தும் முறை என்றால் யாருக்கும் தெரியாது. இதில் கருப்பையா எந்த முறையை தேர்வு செய்ய உள்ளார்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோட ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு , எதிர்ப்பு என இரண்டுக்கும் ஒரே எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் வாக்களித்தால் சபாநாயகர் வாக்கு தான் வெற்றியை நிர்ணயம் செய்யும். அப்போது அவர் விஜய்க்கு ஆதரவாக அவர் வாக்களித்தால் முதல்வர் பதவிக்கு எந்த வித சிக்கலும் வராது. இதனால் தான் விஜய் முதல்வராக தொடர்வது என்பது தற்காலிக சபாநாயகர் கருப்பையாவின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

