Thursday, February 12, 2026 12:52 pm
உலக கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 30 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் 197 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

