Sunday, August 23, 2026 2:39 pm
தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள 227 உறுப்பினர்களில் 54 எம்.எல்.ஏ-க்களிடம் சொந்தமாக ஒரே ஒரு கார் கூட இல்லை என்ற தகவல் வேட்புமனு தாக்கல் தரவுகளின் அடிப்படையில் வெளியாகியுள்ளது.
தவெகவைச் சேர்ந்த 107 உறுப்பினர்களில் 32 பேரிடம் கார் இல்லை. திமுகவின் 59 உறுப்பினர்களில் 9 பேரிடமும், அதிமுகவின் 41 உறுப்பினர்களில் 8 பேரிடமும் சொந்த கார் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஐ, சிபிஎம், முஸ்லிம் லீக், விசிக ஆகிய கட்சிகளில் தலா ஒரு உறுப்பினரிடமும், பாமகவில் ஒரு உறுப்பினரிடமும் கார் இல்லை.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் , அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்ட பல விஐபி தலைவர்களிடமும் சொந்தமாக கார் இல்லை என்றே தரவுகள் காட்டுகின்றன.
அதேவேளையில், சட்டமன்றத்தில் உள்ள 227 உறுப்பினர்களும் சேர்ந்து மொத்தமாக 396 கார்களை வைத்துள்ளனர். இந்த கார்களின் மொத்த சந்தை மதிப்பு ₹89 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

