Friday, May 8, 2026 10:31 am
வியட்நாம் ஜனாதிபதி இன்று வெள்ளிக்கிழமை (08) இலங்கையை வந்தடைந்ததை முன்னிட்டு உத்தியோகப்பூர்வ வரவேற்பளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் காலை ஆரம்பமாகியுள்ளது.
வியட்நாம் ஜனாதிபதியும், அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருடன் 209 பேரைக் கொண்ட தூது குழுவினர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளனர்.
இந்தியாவின் மும்பை நகரிலிருந்து வியட்நாம் ஏர்லைன்ஸிற்கு (vietnam airlines) சொந்தமான VN-1 எனும்விமானம் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

