Thursday, July 2, 2026 10:18 am
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் விஞ்ஞான செயன்முறை முகாமொன்று நேற்றையதினம் (01) நடைபெற்றது.
கல்லூரியின் முன்னாள் விஞ்ஞான பாட ஆசிரியர் ந.காளிதாசனின் 80வது அகவை நிறைவை முன்னிட்டு குறித்த நிகழ்வு பழைய மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

