Monday, May 11, 2026 1:17 pm
மஹியங்கனை – அராவத்தை , ஒருபெதிவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மனைவி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் 35 வயதுடைய , மூன்று பிள்ளைகளின் தாயென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிறு (10) இரவு தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் போது , மதுபோதையில் இருந்த கணவர் , மனைவியையும் மகளையும் சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அவர் , வீட்டில் இருந்த ஏயார் ரைஃபில் (Air Rifle) ரக துப்பாக்கியால் மனைவியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் காயமடைந்த மனைவி உடனடியாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்குப் பின்னர் சந்தேக நபரான கணவன் , வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது , துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட ஏயார் ரைஃபில் துப்பாக்கி மற்றும் 77 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தலைமறைவாக உள்ள சந்தேக நபரை கைது செய்வதற்காக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

