Friday, May 8, 2026 4:24 pm
தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தநிலையில், தற்போது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.
தவெகவிற்கான ஆதரவுக்கடிதம் அக்கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற மற்றக் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிவந்தது.
காங்கிரஸ் நேற்றுமுன்தினம் ஆதரவு தெரிவித்த நிலையில் சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட இடதுசாரிகளிடமும் ஆதரவு கோரியது.
தங்களது ஆதரவு முடிவை உறுதிப்படுத்தியுள்ளது சிபிஐ. நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இதன்மூலம் தவெக கூட்டணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 115-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 4 பேர் விஜய்க்கு ஆதரவு அளிக்கவேண்டும்.

