Friday, May 8, 2026 3:12 pm
வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை பொலிஸார் முடக்கியுள்ளனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இச் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 07 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு சொகுசு பஸ்கள் நேற்று வியாழக்கிழமை (07) முடக்கப்பட்டுள்ளன.
பணமோசடிக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ், கைப்பற்றப்பட்ட பஸ்களில் ஒன்றின் தற்போதைய உரிமையாளர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

