Thursday, July 23, 2026 4:20 pm
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘அரகலய’ போராட்டத்தின்போது, சமூக ஊடகச் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த நளின் பிரியந்த ஆகியோரே இந்த மீறலுக்குப் பொறுப்பானவர்கள் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
போராட்டத்தின் போது தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து அனுருத்த பண்டார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

