Thursday, July 23, 2026 4:42 pm
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மனு ஒன்றினை கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனைகளுக்காக இன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியிரந்தார். இந்நிலையில் குறித்த மனு மேலதீக பரிசீலனைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3ம் திகதிவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

