Wednesday, November 25, 2026 4:45 pm
பொது ஒழுக்கத்திற்கு எதிரான உள்ளடக்கத்தை தயாரித்து வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய பாடகி பராஸ்டூ அஹ்மதி , அவரது தயாரிப்பு குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு தலா 74 கசையடி வழங்கும் தண்டனையை ஈரான் நிறைவேற்றியுள்ளது.
இ கலை , இசை நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்க இரண்டு ஆண்டுகள் தடையும், பயண கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் முஸ்தபா நிலி தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 டிசம்பர் மாதம் யூடியூபில் வெளியான வீடியோ ஒன்றில், கட்டாய ஹிஜாப் அணியாமல் ஆண் இசைக்கலைஞர்களுடன் இணைந்து பராஸ்டூ அஹ்மதி பாடியதே இந்த வழக்கிற்கு காரணமாகும்.
பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற ஈரானிய சட்டத்தை மீறியதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் கசையடி தண்டனையை சித்திரவதை என கண்டித்து வரும் நிலையில், ஈரான் அந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளது.

