Wednesday, November 25, 2026 4:56 pm
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கங்கை நதிக்கரை படித்துறைகளில், புகழ்பெற்ற ‘தேவ் தீபாவளி’ விழா நேற்று செவ்வாய்க்கிழமை [24]இரவு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
கார்த்திகை பெளர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில், வாரணாசியில் உள்ள 84 படித்துறைகளிலும் சுமார் 11 இலட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதனால் கங்கை நதிக்கரை முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதந்தது. இதனுடன் 3டி லேசர் காட்சிகள், டிரோன் சாகசங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
பிரசித்தி பெற்ற தசாஸ்வமேத படித்துறையில் ‘கங்கா சேவா நிதி’ அமைப்பு சார்பில் 21 அர்ச்சகர்கள், 42 இளம்பெண்கள் இணைந்து பிரம்மாண்ட கங்கா ஆரத்தி எடுத்தனர். வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 20 அடி உயர ‘அமர் ஜவான் ஜோதி’ மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. வீரர்களின் குடும்பங்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும், அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

