Tuesday, June 9, 2026 2:00 pm
15 வயது இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை தனது பந்து வீச்சில் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க வைத்து அதிரடி காட்டியுள்ளார் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஸ்.
இலங்கையின் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ‘A’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ‘BossBaby’ என அழைக்கப்படும் 15 வயது இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 14 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் சூர்யவன்ஷியின் விக்கெட்டை இலங்கை ‘A’ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஸ் கைப்பற்றினார்.
சூர்யவன்ஷி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும் கூட சிராஸின் பந்துவீச்சில் சஹான் ஆரச்சிகேவிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
இந்திய இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ‘A’ ஆகிய அணிகளுக்கு இடையே இலங்கையின் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று காலை 10க்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

