Tuesday, June 9, 2026 2:45 pm
கொழும்பு – தலவத்துகொட பகுதியில் உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை குறித்த உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீ விபத்தில் காயமடைந்த நான்கு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்ட போதும் தீ விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் தலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

