Monday, May 25, 2026 12:26 pm
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக , வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (25) காலை அவர் தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இந்தநிலையிலே அவர் கைது செய்யப்பட்டு , கடுவலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

