Monday, August 24, 2026 6:20 pm
ஒரு நபருக்கான தினசரி குடிநீர் ஒதுக்கீடு 15 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது
வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தினசரி குடிநீர் ஒதுக்கீடு, ஒரு நபருக்கு 6 லீற்றரரிலிருந்து 15 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம் (NDRSC) தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீர் விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கிணறுகள் மற்றும் பிற நீர் ஆதாரங்களைச் சுத்தம் செய்து சீரமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் NDRSC கூறியுள்ளது.
குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மக்கள், உதவிக்கு ஏற்பாடு செய்ய தங்கள் உள்ளூர் கிராம அலுவலரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

