Friday, May 1, 2026 4:13 pm
அம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (01.05.2026) இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறி இம் மோதல் முற்றிய நிலையில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் இவ்வாறு இளைஞர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பியோடியுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய சூரியவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

