Friday, May 1, 2026 3:44 pm
குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (01.05.2026) இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்கமுவை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ஹயஸ் வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற பெண்ணே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பெண் கல்கமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனவும், அவர் இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய ‘ஹயஸ்’ வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

