Monday, June 15, 2026 12:23 pm
மீன் பிடி தடைக்காலம் நிறைவடைய முன்னர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவடையும். நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதும் நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்ட மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தடையை மீறி தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெறாமல் அனுமதியின்றி சட்டவிரோதமாக மீன்பிடிக்கச்சென்றுள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள போது அனுமதி சீட்டு இல்லாமல் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் சோதனை செய்யப்பட்டு அனைத்து விசைப்படகுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

