Monday, June 15, 2026 11:50 am
2026 பீபா உலகக்கிண்ண போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் போட்டியின் பின் ஜப்பான் ரசிகர்கள் மைதானம் முழுவதையும் சுத்தம் செய்து விட்டு சென்ற காட்சி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2026 பீபா உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் பின் ஜப்பான் ரசிகர்கள் தாங்கள் அமர்ந்திருந்த ஸ்டேடியத்தின் பகுதியைச் சுத்தப்படுத்தி குப்பைகளை நீல நிற பிளாஸ்டிக் பைகளில் சேகரித்து விட்டுச் சென்றனர்.
வெற்றி தோல்வியைக் கடந்து உலக அரங்கில் தங்கள் கலாச்சாரத்தையும் நற்பண்பையும் அவர்கள் வெளிப்படுத்திய இந்த நெகிழ்ச்சியான செயல் இணையதளத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தைப் பெற்றுள்ளதுடன் முன்மாதிரியான இந்தச் செயலுக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்துவருகின்றனர். ஜப்பான் மக்கள் இவ்வாறான சிறந்த விடயங்களை தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.


