Thursday, August 6, 2026 6:00 pm
இந்த ஆண்டில் இதுவரை 280 மருத்துவ அதிகாரிகள் வெளிநாடு செல்ல சம்பளமில்லா விடுப்பு (No-Pay Leave) பெற விண்ணப்பித்துள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி பராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் எஸ்.ஜே.பி. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், 2020 முதல் 2025 வரை மொத்தம் 3,791 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் மேற்படிப்புகளை (Postgraduate Studies) தொடரும் நோக்கில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

