Friday, May 1, 2026 9:26 am
அஜர்பைஜானில் மே 3 ஆம் திகதி அன்று நடைபெறவுள்ள 2026 பாகு மரதனுக்குனுக்கு, பன்னிரண்டுக்கும் மேற்பட்ட, பிராந்தியங்களைச் சேர்ந்த சுமார் 25,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பதிவு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் செவ்வாயன்று தெரிவித்தனர்.
“காற்றை வெல்வோம்” என்ற முழக்கத்தின் கீழ் ஒன்பதாவது முறையாக நடைபெறும் இந்தப் போட்டி முதல் முறையாக முழு 42 கிலோமீற்றர் மரதன் தூரத்தையும் உள்ளடக்கும். இந்தப் பந்தயம் மாநிலக் கொடி சதுக்கத்தில் தொடங்கி, சீ ப்ரீஸ் ரிசார்ட்டில் முடிவடையும்.
அஜர்பைஜான், அமெரிக்கா, ஜேர்மனி, சீனா, ஜோர்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, துருக்கி , உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.உடல் குறைபாடுகள் , கற்றல் குறைபாடுகள் உள்ள ஓட்டப்பந்தய வீரர்களும் போட்டியிடுவார்கள்.

