Friday, May 1, 2026 9:30 am
கட்டாரில் 2026-ஆம் ஆண்டுக்கான 17 வயதுக்குட்பட்டோருக்கான 2026 உலகக் கிண்ணப் போட்டிகள், நவம்பர் 19 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும் என்று பீபா வும், கட்டாரின் உதைப்ந்தாட்ட உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவும் புதன்கிழமை அறிவித்தன.
போட்டிகள், ஆஸ்பயர் மண்டலத்தில் உள்ள அதிநவீன போட்டி வளாகத்தில் நடைபெறும். கடந்த போட்டியில் இந்த வளாகத்தில் 15 போட்டி நாட்களில் 104 போட்டிகள் நடைபெற்றன, இதில் 197,460-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
இறுதிப் போட்டி, புகழ்பெற்ற கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடைபெறும். கடந்த ஆண்டு இதே மைதானத்தில்தான் 38,901 பார்வையாளர்கள் முன்னிலையில் போத்துகல் அணி சம்பியன் பட்டம் வென்றது.

