Friday, August 21, 2026 6:29 am
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேற்று (20) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பிணையில் விடுவிக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இந்தக் குற்றச்சாட்டுப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

