Thursday, August 20, 2026 8:13 pm
தென் கொரியாவுடனான அமெரிக்க இராணுவப் பயிற்சிகளைக் குறைக்குமாறு டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவை வட கொரியா புறக்கணித்த ஒரு நாள் கழித்து, வட கொரியா கடலை நோக்கி சுமார் 10 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது .
வியாழக்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் (08.00 GMT) பியோங்யாங் பகுதியிலிருந்து வட கொரியாவின் கிழக்குக் கடற்பரப்பை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூட்டுப் படைத் தளபதிகள் தெரிவித்தனர்.
தென் கொரியா தனது கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளதாகவும், ஏவுகணைச் சோதனைகள் குறித்த தகவல்களை அமெரிக்கா ஜப்பான் ஆகியவற்றுடன் நெருக்கமாக ஒருங்கிணைத்து வருவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
அந்த ஏவுகணை, ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே கடலில் விழுந்ததாகத் தெரிகிறது என NHK செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் பங்களிப்பைக் கணிசமாகக் குறைக்குமாறு ட்ரம்ப் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தென்கொரியா, அமெரிக்கா ஆகியன நடத்தி வந்த ராணுவப் பயிற்சிகள் வெள்ளிக்கிழமையன்று பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

