Thursday, August 20, 2026 10:29 am
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவது நாளான நேற்றைய தினம் புதன்கிழமை இறுதிநாள் அகழ்வு பணிகள் நடைபெற்றன.
செம்மணியில் முதலாம் கட்ட அகழ்வு பணிக்காக 09 நாட்களும் , இரண்டாம் கட்ட அகழ்வு பணிக்காக 54 நாட்களும் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக 56 நாட்களும் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டு , அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் இதுவரை செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளின் போது, 583 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவை அனைத்தும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

