Sunday, April 19, 2026 8:49 pm
பீஜிங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ரோபோக்களுக்கான அரை மரதன் பந்தயத்தில் வெற்றி பெற்ற மனித உருவ ரோபோ ஒன்று, மனித உலக சாதனையை விட வேகமாக ஓடி, சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை எடுத்துக்காட்டியது.
பந்தயம் தொடங்கிய இடமான, பீஜிங் இ-டவுன் என்றும் அழைக்கப்படும் பீய்ஜிங் பொருளாதார-தொழில்நுட்ப மேம்பாட்டுப் பகுதியின் WeChat பதிவின்படி, சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹானரைச் சேர்ந்த ரோபோ, 21 கிலோமீற்றர் (13 மைல்) பந்தயத்தை 50 நிமிடங்கள் , 26 வினாடிகளில் நிறைவு செய்தது.
கடந்த மார்ச் மாதம் லிஸ்பன் சாலைப் பந்தயத்தில் அதே தூரத்தை சுமார் 57 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த, மனித உலக சாதனையாளரான உகாண்டாவின் ஜேக்கப் கிப்லிமோவை விட இது வேகமானதாகும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தொடக்கப் பந்தயத்தில், வெற்றி பெற்ற ரோபோ 2 மணி நேரம், 40 நிமிடங்கள் மற்றும் 42 வினாடிகளில் பந்தயத்தை முடித்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ரோபோவின் செயல்பாடு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. சுமார் 40 சதவீத ரோபோக்கள் தானாகவே பாதையில் பயணித்ததாகவும், மற்றவை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டதாகவும் பீஜிங் ஈ-டவுன் தெரிவித்துள்ளது.

