Wednesday, July 1, 2026 8:57 pm
போரின் முதல் நாளான பெப்ரவரி 28 ஆம் திகதி, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கிற்கான நிகழ்ச்சி நிரலை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
ஈரானின் மூன்று முக்கிய நகரங்களான தெஹ்ரான், கோம் , மஷ்ஹத் ஆகிய இடங்களிலும், ஈராக்கின் இரண்டு முக்கியமான ஷியா முஸ்லிம் நகரங்களான கர்பலா , நஜாஃப் ஆகிய இடங்களிலும் விழாக்கள் நடைபெறும்.
இந்த நிகழ்வுகளில் சுமார் 15 முதல் 20 மில்லியன் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும், இது ஈரானின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அரச இறுதிச் சடங்காக அமையும் என்றும் ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
நினைவுக் கொண்டாட்டங்கள் ஆறு நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெஹ்ரானில் ஜூலை 4 ஆம் திகதி தொடங்கி, மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜூலை 6 ஆம் திகதி நடைபெறும் பிரதான இறுதி ஊர்வலத்துடன் இது நிறைவடையும். இந்தக் காலகட்டத்தில் நகரின் வான்வெளி முழுவதுமாக மூடப்பட்டிருக்கும் என்று அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜூலை 7 ஆம்திகதி, கமெனியின் உடல் புனித நகரமான கோமிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் ஈராக்கில் உள்ள நஜாஃப் ,கர்பலா ஆகியவற்றுக்குக் கொண்டு செல்லப்படும். இறுதியாக, ஜூலை 9 ஆம் திகதி மஷ்ஹத்தில் நடைபெறும் நினைவு அஞ்சலி நிகழ்வுகளின் முடிவில் அவர் நல்லடக்கம் செய்யப்படுவார்.

