Tuesday, May 5, 2026 5:02 pm
பரந்தூரில் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
2023-ல் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டதில் இருந்து, சுமார் 5,320 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக 20 கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
நேரடியாக பரந்தூருக்கே சென்று போராட்ட களத்தில் குதித்த விஜய், நீர்நிலைகளையும் விளைநிலங்களையும் அழித்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை கடுமையாக விமர்சித்தார். “நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல, ஆனால் மக்கள் வாழ்விடங்களை அழித்து திட்டம் வருவதை ஏற்க முடியாது” என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது.
தற்போது 2026 தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. ஏற்கனவே சுமார் 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விஜய் அந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்வாரா அல்லது மாற்று இடத்தை தேர்வு செய்வாரா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

