Friday, June 19, 2026 3:38 pm
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக இன்று (19) வெள்ளிக்கிழமையும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினர்.
இதன்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட காணி உரிமையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

