Tuesday, May 5, 2026 5:09 pm
தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கவுள்ளது. ஒருபக்கம் 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக திமுக கூட்டணி அமைத்து. 10 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், அதில் பிரேமலதா மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். அதேநேரம், தவெகவுக்கு ஆட்சி அமைக்க இன்னும் 13 எம்.எல்.ஏக்கள் தேவை. எனவே, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், விஜயின் வெற்றி பற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பிரமலதா ‘விஜய் எங்க வீட்டு பிள்ளைதான்.. சிறுவயதிலிருந்தே பார்த்திருக்கிறோம்.. எங்கள் வீட்டின் அருகில்தான் வசித்தார்.. கேப்டனோடு பயணித்தவர் அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். ‘நீங்கள் விஜய்க்கு ஆதரவு கொடுப்பீர்களா?’ என்ற கேள்விக்கு ‘நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கிறோம்’ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதாவது நான் விஜய்க்கு ஆதரவு கொடுக்க மாட்டேன் என்பதை அவர் மறைமுகமாக சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் சினிமாவில் சரியான வெற்றி கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த போது தன்னை சினிமாவில் வளர்த்து விட்ட இயக்குனர் எஸ்.ஏ.சி கேட்டதால் விஜயை வைத்து அவர் இயக்கிய செந்தூரப்பாண்டி படத்தில் விஜயின் அண்ணனாக நடித்து அவருக்கு அங்கீகாரம் கொடுத்தார் விஜயகாந்த். அதன் பின்னர் விஜய் உச்சத்துக்குச் சென்றார்.
ஆனால் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது விஜய் எந்த ஆதரவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். அதோடு விஜயின் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்க வந்த போது கூட விஜய் எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை. தன்னுடைய படங்களில் கூட அவரை நடிக்க வைக்கவில்லை. விஜயகாந்த் மறைந்த பின்னரும் விஜய் அதை செய்யவில்லை. இது விஜயகாந்த் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே சமூகவலைத்தளங்களில் விஜயை கடுமையாக விமர்சித்தனர்..

