Friday, June 19, 2026 12:06 pm
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மெக்சிகோ மற்றும் தென்கொரியா அணிகளுக்கிடையிலான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி மெக்சிகோ அபார வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் லூயிஸ் ரோமோ கோல் அடித்து மெக்சிகோ அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தென்கொரியா அணி ஆட்டத்திற்குள் வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது பயனற்று மெக்சிகோ வீரர்களின் சிறப்பான தற்காப்பு ஆட்டத்தால் ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
அதேபோன்று சுவிட்சர்லாந்து தேசிய கால்பந்து அணி பொஸ்னியா அணியை 4 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. முதலாவது இரண்டாவது பாதியும் சுவிட்சர்லாந்து அணியின் அதிரடி ஆதிக்கத்துடன் காணப்பட்டது.
கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா அணி தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. ஆட்டத்தின் விறுவிறுப்பான இரண்டாம் பாதியில் கட்டார் அணியின் வீரர்களின் எண்ணிக்கை குறைந்ததைத் தமக்கு சாதமாக மாற்றி கனடா அணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.
மேலும் தென் ஆப்பிரிக்கா அணியை 1-0 என்ற கணக்கில் செக்குடியரசு வெற்றி பெற்றுள்ளது.

