Wednesday, May 27, 2026 3:44 pm
தவெக ஆட்சியமைக்க 10 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டபோது விடுதலை சிறுத்தை கட்சியும் தங்களின் ஆதரவை கொடுத்தது. அதோடு தவெகவின் அமைச்சரவையிலும் விசிக இடம் பெற்றிருக்கிறது.இது திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே விடுதலை சிறுத்தை கட்சிக்கு எதிராக திமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். ஆ.ராசா சமூகவலைத்தளங்களில் இட்ட பதிவு பலரையும் முகம் சுளிக்க வைத்தது. ஆ.ராசாவின் பதிவு விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் ஆ.ராசாவை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம் அறிவித்தனர். அப்போது திமுகவினரும் போராட்டம் நடத்தினர். அங்கு பொலிஸார் குவிக்க பட்டிருந்த நிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்திக்கொண்டனர். இரு தரப்பிற்கும் அனுமதி மறுக்கபட்ட நிலையில் போராட்டம் மோதலாக மாறியது. பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ‘ஆ.ராசாவை எதிர்த்து விமர்சிப்பதோ, திமுகவுக்கு எதிராக விமர்சனங்கள் செய்வதோ அல்லது போராட்டங்கள் நடத்துவதோ தேவையற்றது. பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம். இயக்கத் தோழர்கள் இதனை கடந்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

